Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு பி.சி.சி.ஐ அழைப்பு

In கிாிக்கட்
Updated: 04:58 GMT, May 26, 2017 | Published: 04:58 GMT, May 26, 2017 |
0 Comments
1386
This post was written by : Anojkiyan

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரான அனில் கும்ப்ளேவின் பதவிக்காலம் எதிர்வரும் ஜூன் மாதத்துடன் முடிவடைய இருப்பதால், தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விருப்பம் தெரிவிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (பி.சி.சி.ஐ) அழைப்பு விடுத்துள்ளது.

இதில் அனில் கும்ப்ளேவிற்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவர் நேரடியாக விண்ணப்பித்ததாக கருதப்படும்.

லஷ்மண், சச்சின் டெண்டுல்கர், கங்குலி தலைமையிலான குழு தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்வார்கள் என கூறப்பட்டுள்ளது.

இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையில் சீர்திருத்தம் கொண்டு வருவதற்காக உச்சநீதிமன்றம் நியமித்த நான்கு பேர் கொண்ட நிர்வாகக்குழுவுடன், கும்ப்ளே இணக்கமாக செயல்படுவதால் கும்ப்ளேயின் பதவிக்காலம் மேலும் ஒரு வருடங்கள் நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg