Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உணவுப் பொருட்கள் மீதான வரியை குறைக்க கோரி தமிழகத்தில் போராட்டம்

In இந்தியா
Updated: 09:15 GMT, May 26, 2017 | Published: 08:26 GMT, May 26, 2017 |
0 Comments
1303
This post was written by : Risha

உணவுப் பொருட்கள் மீதான பொருட்கள் மற்றும் சேவைகள் வரியை குறைக்க வலியுறுத்தி எதிர்வரும் 30 ஆம் திகதி தமிழகம், புதுச்சேரியில் உணவு விடுதிகள் மற்றும் வெதுப்பகங்களை அடைத்து போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காய்கறி விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் உணவகங்கள் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள நிலையில், வரி விதிப்பானது தமக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் என உணவகங்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சாதாரண உணவகங்களில் வழங்கப்படும் உணவுப் பொருட்களுக்கு 2 சதவீத வரியும், ஏ.சி. வசதி உள்ள ஹோட்டல்களில் 2 சதவீத வாட் வரி மற்றும் 6 சதவீத சேவை வரி விதிக்கப்படுகிறது. இந்த வரிவிதிப்பை 12 மற்றும் 18 சதவீதங்களால் உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த எதிர்ப்பு வெளியாகியுள்ளது.

போராட்ட தினத்தில் தமிழகம் முழுவதும் காணப்படும் சுமார் 1.5 இலட்சம் உணவகங்கள் மற்றும் வெதுப்பகங்கள் 24 மணி நேரம் மூடப்படும். இதனால் ரூ.500 கோடிக்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg