Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரச திணைக்களங்களை வழங்குமாறு கோரவில்லை: கயந்த கருணாதிலக

In இலங்கை
Updated: 10:49 GMT, May 26, 2017 | Published: 10:30 GMT, May 26, 2017 |
0 Comments
1192
This post was written by : Vithushagan
Screen-Shot-2015-09-14-at-3.56.31-PM

திரைப்படக் கூட்டுத்தாபனம் உள்ளிட்ட மூன்று அரசாங்க திணைக்களங்களை வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்ததாக வெளியான செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லையென காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

காணி அமைச்சின் கீழ் இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனம், அரச அச்சகக் கூட்டுத்தாபனம், அரசாங்க அச்சகம் ஆகியவற்றை தனக்கு வழங்குமாறு அமைச்சர் கயந்த கருணாதிலக கோரிக்கை விடுத்ததாக ஊடகங்கள் சிலவற்றில் பிரதான செய்தியாக வெளியிடப்பட்டிருந்தது.

இந்தச் செய்தி தொடர்பில் நேற்று பாராளுமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்திருந்த அமைச்சர் கயந்த கருணாதிலக, இந்தச் செய்திகளில் எந்தவிதமான உண்மையும் இல்லையென மறுத்ததுடன், தான் எந்தவொரு அரசாங்க நிறுவனத்தையும் தனக்கு வழங்குமாறு கோரவில்லையென்றும் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பில் அமைச்சரவை விளக்கமொன்றை சபைக்குள் வழங்கியிருந்த அமைச்சர், பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றையும் நடத்தி தெளிவுபடுத்தியிருந்தார்.

இதுவரை தான் வகித்த பதவிகளோ அல்லது அமைச்சுப் பொறுப்புக்களோ கேட்டுப் பெறப்பட்டவை இல்லையென்று சுட்டிக்காட்டிய அவர், தனக்கு வழங்கப்பட்ட பொறுப்புக்களை முறையாக, சரியான முறையில் முன்னெடுத்துச் சென்றதாகவும் கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg