Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குடியேற்றவாசிகள் ஸ்கொட்லாந்திற்கு வர மறுப்பதற்கு காரணங்கள் பல உள்ளன

In
Updated: 12:33 GMT, May 26, 2017 | Published: 11:45 GMT, May 26, 2017 |
0 Comments
1745
This post was written by : Sylviya

ஸ்கொட்லாந்திற்கு குடியேற்றவாசிகள் வர மறுப்பதற்கு பல காரணங்கள் உள்ளன என ஸ்கொட்லாந்து கொன்சர்வேற்றிவ் கட்சியின் தலைவர் ரூத் டேவிட்சன் (Ruth Davidson) தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றினால் இன்று (வெள்ளிக்கிழமை) நடத்தப்பட்ட நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

உயர்ந்த வரி விதிக்கப்படும் பகுதியாக ஸ்கொட்லாந்து காணப்படுகின்றது எனவும் அதனால் குடியேற்றவாசிகள் ஸ்கொட்லாந்துக்கு வர  தயங்குகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், சிறந்த குடியேற்றத் திட்டம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது இவ்வாறிருக்க, பிரித்தானிய கொன்சர்வேற்றிவ் கட்சியின் பொதுத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பிரித்தானியாவுக்குள் உள்வாங்கப்படும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை பத்தாயிரமாக வரையறுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த பொதுத் தேர்தல் குறித்த பிரசார நடவடிக்கைகள் மஞ்செஸ்டரில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் காரணமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg