Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இரத்த நாள அடைப்பு பிரச்சினைகளை குணப்படுத்தும் வழிகள்

In
Updated: 12:30 GMT, May 26, 2017 | Published: 11:39 GMT, May 26, 2017 |
0 Comments
1298
This post was written by : Elakkiya

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இரத்த நாள அடைப்பு பிரச்சினை ஏற்படலாம். இந்த பிரச்சினைகளை கைமருந்துகள் மூலம் குணப்படுத்த முடியும்.

இதயத்துக்கு வெளியில் உள்ள இரத்தக் குழாய்கள் சுருங்குவதை பெரிப்ரல் ஆர்ட்டீரியல் டிசிஸ் என்று அழைப்பார்கள். ஒருவித கெட்ட கொழுப்பு கரைபடுவதால் இது உருவாகிறது. இரத்த நாளங்களில் ஹபிளேக் என்று கூறப்படும் அழுக்கானது படியலாம். இது கையிலும், காலிலும் படியலாம். இதனால் சுத்தமான இரத்த நாளங்கள் அடைபடுகின்றன. இரத்த ஓட்டம் தடைப்படுகிறது. குறிப்பாக, கால்களுக்கு இரத்தம் செல்வது தடைபடுகின்றது.

இதனை எவ்வாறு தவிர்க்கலாம்?

பூண்டு பற்களை நன்றாக வேகவைத்துப் பாலில் கலந்து காலை, மாலை என இரு வேளையும் குடித்து வந்தால் உடம்பில் கெட்ட கொழுப்புக்களின் அடைப்பு குறையும்.

பொதுவாக, நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்கள், கெட்ட கொழுப்பு அடைப்பை உடலில் சேரவிடாமல் தடுக்கும். இதற்குச் சிறந்த உதாரணமாக அப்பிள் பழத்தைக் குறிப்பிடலாம். வாழைத்தண்டு, கீரை வகைகளைக் கூட்டு வைத்துச் சாப்பிடலாம்.

ஐந்து கிராம் கொள்ளுடன், சிறிது கறிவேப்பிலை சேர்த்து நன்றாக அரைக்கவும். இதை 2 டீஸ்பூன் அளவுக்கு எடுத்து சாதத்துடன் சேர்த்து, நல்லெண்ணெய்விட்டுப் பிசைந்து சாப்பிட்டுவந்தால் கொழுப்பு அடைப்பு குறையும்.

கொள்ளை வேகவைத்து அரைத்து வடிகட்டி சிறிது இஞ்சி பூண்டு சீரகம் சேர்த்துத் தாளித்து ரசமாகக் குடிக்கலாம்.சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம்.

கறிவேப்பிலையுடன் சிறிது உளுந்து, புளி, உப்பு சேர்த்து துவையல் செய்து உணவுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.
வாழைத்தண்டு சாற்றில் கருமிளகை 48 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் காய வைத்துப் தூளாக்கவும். உணவில் மிளகுக்குப் பதிலாக இந்தப் பொடியை பயன்படுத்தவும். உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரைந்துவிடும்.

நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் கொடம்புளி என்னும் புளியை வழக்கமாகப் பயன்படுத்தும் புளிக்கு பதிலாகப் பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg