Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவராகிறார் நஜம் சேதி!

In கிாிக்கட்
Updated: 05:36 GMT, May 27, 2017 | Published: 05:36 GMT, May 27, 2017 |
0 Comments
1383
This post was written by : Anojkiyan

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவராக பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடருக்கான தலைவர் நஜம் சேதியை நியமிக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய தலைவரான ஷகாரியார் கானின் பதவிக்காலம் எதிர்வரும் ஒகஸ்ட் மாதத்துடன் முடிவடையவுள்ள நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் நஜம் சேதிக்கு குறித்த பதவியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு அவர் அளித்துள்ள பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் பாகிஸ்தான் அரசு வழங்கும் மதிப்பிற்குரிய செயல்திறன் விருதுக்கு, பரிந்துரை செய்ய வேண்டும் என்றும் இதன்போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஷகாரியார் கான், வயது மற்றும் உடல் ஆரோக்கியம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பதவிக்கால நிறைவின் பின், பதவி வகிக்கப்போவதில்லை என்று ஏற்கனவே அறிவித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg