Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ட்ரம்பின் வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகள் வெளியாகியுள்ளன

In
Updated: 07:50 GMT, May 27, 2017 | Published: 07:50 GMT, May 27, 2017 |
0 Comments
1476
This post was written by : Elakkiya

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது முதலாவது வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளை அறிவித்துள்ளார். இன்று சனிக்கிழமை வெளியாகிய ட்ரம்பின் பொதுமக்களுக்கான வாராந்த உரையில் மேற்படி முன்மொழிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்பிரகாரம், ‘2018 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டமானது பொருளாதார தேக்கநிலையை குறைத்து அமெரிக்க தொழிலாளர்களுக்கு மில்லியன் கணக்கான புதிய வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்தும்’ என்று ட்ரம்ப் தனது வாராந்த உரையில் தெரிவித்துள்ளார்.

மேலும், குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்க அதிகாரிகள் மற்றும் எல்லை ரோந்து படையினருக்கு தேவையான அனைத்தையும் வழங்குவதாக ட்ரம்ப் உறுதியளித்துள்ளார்.

ட்ரம்பினால் முன்மொழியப்பட்டுள்ள மேற்படி வரவு செலவுத்திட்டம் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கும் தனியார் துறை வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதற்கும் வரிகுறைப்புக்களை வழங்கியுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் விபரித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg