Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உண்மைக்கு முரணான செய்திகளை வெளியிட வேண்டாம்: ஹர்பஜன் சிங்

In கிாிக்கட்
Updated: 05:20 GMT, May 28, 2017 | Published: 05:04 GMT, May 28, 2017 |
0 Comments
1783
This post was written by : Surenth
Harbhajan

ஊடகங்களில் பரபரப்பான செய்திகளை வெளியிட வேண்டும் என்பதற்காக உண்மைக்கு முரணான செய்திகளை வெளியிட வேண்டாம் என இந்திய அணியின் சுழல் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சம்பியன்ஸ் தொடருக்கு தான் தெரிவுசெய்யப்படாதமை மற்றும் தோனி தெரிவுசெய்யப்பட்டமை தொடர்பில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கியிருந்த  செவ்வியில் குறிப்பிட்டிருந்த கருத்துக்கள், ஊடகங்களில் பலவாறான வெளிவந்திருந்தன. இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தான் அந்த ஊடகத்தில் தெரிவித்திருந்த கருத்துக்களை திரிபுபடுத்தி வெளியிட்டுள்ளதாகவும் உண்மையை தெரிந்து கொள்ள வேண்டுமாக இருந்தால் அந்த செவ்வியின் வீடியோ காட்சியினை முழுமையாக பார்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

தோனி தன்னுடைய நண்பர் எனவும் அவர் சிறந்த வீரர் எனவும் குறிப்பிட்டுள்ள ஹர்பஜன், அவரது தெரிவு குறித்து தான் ஐயம் வெளியிடவில்லை என  சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், ஊடகங்களை நடத்த வேண்டும் என்பதற்காக பரபரப்பாக செய்திகளை வெளியிட்டு மற்றவர்கள் கூறியதை திரிபுபடுத்தி தவறாக வெளியிடுகின்றனர் என ஹர்பஜன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg