Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மத்திய லண்டனில் அமைந்துள்ள திரையரங்கிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

In
Updated: 05:25 GMT, May 28, 2017 | Published: 05:18 GMT, May 28, 2017 |
0 Comments
1246
This post was written by : Anojkiyan

மத்திய லண்டனில் அமைந்துள்ள திரையரங்கிற்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த திரையரங்கில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்படாத போதும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டமை குறித்து அதிகாரிகள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.

மத்திய லண்டனில் வாட்டர்லூ ரயில் நிலையம் அருகில் உள்ள ஓல்ட்விக் திரையரங்கிற்கு நேற்று (சனிக்கிழமை) குறித்த வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், திரையரங்கில் இருந்த அனைவரையும் வெளியேற்றியதோடு, அருகில் இருந்த உணவகங்கள், விடுதிகள் ஆகியவற்றில் இருந்தவர்களையும் வெளியேற்றினர். திரையரங்கை சுற்றியுள்ள அனைத்து வீதிகளும் மூடப்பட்டு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு என்பன தீவிரப்படுத்தப்பட்டன.

ஆனால் இப்பகுதியில் சந்தேகிக்கும் படியாக எவ்வித பொருட்களையும் அதிகாரிகள் மீட்கவில்லை. தற்போது இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg