Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காணாமல் போனோரின் உறவினர்களை சந்திக்க ஜனாதிபதி இணக்கம் (4ஆம் இணைப்பு)

In இலங்கை
Updated: 04:27 GMT, May 30, 2017 | Published: 04:27 GMT, May 30, 2017 |
0 Comments
2557
This post was written by : Varshini

presidents meets missing persons

காணாமல் போனோரின் உறவினர்களை சந்திப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளாார்.

இந்த அறிவிப்பை அடுத்து, கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்னால் இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வந்த  வீதி மறியல் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியால் வடக்கு ஆளுநர் அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட குறித்த அறிவிப்பு, ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன் ஊடாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபருக்கு அறிவிக்கப்பட்டு, அரசாங்க அதிபர் ஊடாக மக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் குறித்த அறிவிப்பில், காணாமல் போனோர் குறித்து ஆராய அடுத்த வாரம் விசேட குழுவொன்றை அமைக்கவுள்ளதாகவும், குறித்த குழுவில் காணாமல் போனோரின் உறவினர்களது பிரதிநிதிகள்  தமது கருத்துக்களை பதிவுசெய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர், அக் குழுவின் அறிக்கை ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்டு மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தத்தை கருத்திற்கொண்டு, எதிர்வரும் இரண்டு வாரங்களில் காணாமல் போனோரின் உறவினர்களை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

DBETzOxUQAQrLGQ

பிரதமருடனான சந்திப்பிற்கு மறுப்பு! – கிளிநொச்சியில் தொடர்கிறது போராட்டம் (3ஆம் இணைப்பு)

 

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக பிரதமர் ரணிலுடன் ஏற்பாடு செய்யப்பட்ட பேச்சுவார்த்தைக்கு மறுப்புத் தெரிவித்துள்ள அவர்களது உறவினர்கள், ஜனாதிபதியுடனான சந்திப்பிற்கு அனுமதி கிடைக்கும் வரை போராட்டம் தொடருமென திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் முன்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சந்தித்த கிளிநொச்சி அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், பிரதமர் அலுவலகத்திலிருந்து வந்த செய்தியை மக்களிடம் தெரிவித்தார்.

இதனை ஏற்றுக்கொள்ளாத காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், ஜனாதிபதியுடனான சந்திப்பிற்கு ஏற்பாடு செய்து தருமாறு கோரிக்கை விடுத்ததோடு, தமது வீதி மறியல் போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவினர்கள் தொடர்பான உண்மை நிலையை வெளிப்படுத்துமாறு வலியுறுத்தி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர்களது உறவினர்கள், தமது போராட்டம் இன்றுடன் 100 நாட்களை எட்டியுள்ள நிலையில் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தடையை மீறி வீதி மறியல் போராட்டம்: சட்டத்தரணிகளும் ஆதரவு (2ஆம் இணைப்பு)

கிளிநொச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வீதி மறியல் போராட்டத்திற்கு பொலிஸார் தடையுத்தரவை பெற்றிருந்த நிலையில், குறித்த தடையை மீறி காணாமல் போனோரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த போராட்டத்திற்கு சட்டத்தரணிகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அத்தோடு, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி மற்றும் மதத் தலைவர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

போராட்ட இடத்திற்கு வருகை தந்த கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சத்தியசீலனிடம் ஜனாதிபதிக்கு அனுப்பிவைப்பதற்கான மகஜரொன்றை கையளித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், குறித்த மகஜருக்கு உரிய பதில் கிடைக்கும் வரை வீதி மறியல் போராட்டம் தொடருமென குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, வீதி மறியல் போராட்டம் நடைபெறும் வீதி வழியாக அம்புலன்ஸ் வண்டிகள் மாத்திரம் செல்வதற்கு போராட்டக்காரர்கள் அனுமதி வழங்கியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

kili protes t (2) kili protes t

 

காணாமல் போன தமது உறவுகளின் உண்மை நிலையை வெளிப்படுத்துமாறு கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) 100 நாட்களை எட்டியுள்ள நிலையில், அதனை மையப்படுத்தி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வீதி மறியல் போராட்டத்திற்கு நீதிமன்றில் பொலிஸார் தடையுத்தரவை பெற்றுள்ளனர்.

தமிழர் தாயகத்தில் படையினரிடம் கையளிக்கப்பட்ட நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரி, கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இரவு பகலாக இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், 100 நாட்களை குறிக்கும் வகையில் காணாமல் போனோரின் உறவினர்களினால் வீதி மறியல் போராட்டம் ஒன்றிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும், இந்த வீதிமறியல் போட்டத்திற்கு நீதிமன்ற தடையுத்தரவினைப் பெற்ற பொலிஸார், சம்பவ இடத்திற்குச் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவிருந்த மக்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். அத்தோடு, மக்களை அச்சுறுத்தும் வகையில் ஒளிப்படங்களாகவும் காணொளிகளாகவும் பதிவு செய்து வருவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இன்றைய தினம் சர்வமத பிரார்த்தனை ஒன்றிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யுத்தம் நிறைவுற்று எட்டு வருடங்களாகிய பின்னரும் தமது உறவினர்கள் தொடர்பில் எவ்வித தீர்க்கமான பதிலையும் அரசாங்கம் வழங்காத நிலையில், விசாரணைகளிலும் நம்பிக்கையற்று இம் மக்கள் இறுதியாக அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சர்வதேசத்தின் தலையீட்டுடன் நம்பகரமான விசாரணைகளை முன்னெடுத்து தமது உறவினர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே இம் மக்களின் கோரிக்கையாக உள்ளது.

kili protest (1) kili protest (2) kili protest (3)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg