Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தினகரனுக்கு பிணை கிடைக்குமா? – நாளை தீர்ப்பு

In இந்தியா
Updated: 04:31 GMT, May 30, 2017 | Published: 04:31 GMT, May 30, 2017 |
0 Comments
1387
This post was written by : Risha

தேர்தல் ஆணையகத்திற்கு இலஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்ட டி.டி.வி.தினகரனின் பிணை மனு மீதான தீர்ப்பு நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு 50 கோடி ரூபா இலஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் டி.டி.வி.தினகரன் கைது செய்யப்பட்டு, இம்மாதம் முதலாம் திகதி முதல் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பிணை கோரி தினகரன் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரது பிணை மனு கோரிக்கை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வந்த நிலையிலேயே நாளை தீர்ப்பு வெளியாகும் என தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி வழக்கு நேற்றும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன்போது டெல்லி பொலிஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தினகரனால் தேர்தல் நடைமுறையின் புனிதத்துவம் மாசுபடுத்தப்பட்டுள்ளது. எனவே தினகரனின் பிணை மனுக்களை கடுமையாக எதிர்ப்பதாக வாதிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg