Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கும்ளே- விராட் கோஹ்லிக்கு இடையில் கருத்து முரண்பாடு!

In கிாிக்கட்
Updated: 07:14 GMT, May 30, 2017 | Published: 06:53 GMT, May 30, 2017 |
0 Comments
1719
This post was written by : Elakkiya

இந்திய கிரிக்கட் அணியின் பயிற்சியாளர் அனில் கும்ளே மீது இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபை அதிருப்தி கொண்டுள்ளதாகவும் அதற்கு கும்ளே மற்றும் விராட் கோஹ்லி ஆகியோருக்கு இடையிலான மோதல்களே காரணம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் ஜூன் மாதம் ஆரம்பமாகவுள்ள சம்பியன் கிண்ண கிரிக்கட் தொடருடன் அனில் கும்ளேயில் பதவிக்காலம் நிறைவடையவுள்ள நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை சார்பில் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இந்நிலையில் அனில் கும்ளே மீது இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபை அதிருப்தி கொண்டுள்ளதால் அவருக்கு பதவி நீடிப்பு வழங்க முன்வரவில்லை என்று  தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்தியா மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கட் தொடரின் இறுதிப் போட்டியில் விராட் கோஹ்லி மற்றும் கும்ளே ஆகியோருக்கு இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டதாகவும் இதனால் கும்ளேக்கு பதிலாக வேறு ஒருவரை பயிற்சியாளராக நியமிக்கலாம் எனவும் கோஹ்லி அபிப்பிராயப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

மேற்படி கருத்து முரண்பாடுகளே கும்ளே மீதான இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் அதிருப்திக்கு காரணமாக கருதப்படுகின்றது.

அதுமட்டுமின்றி, வீரர்களுக்கான ஒப்பந்த ஊதியம் மற்றும் தனது ஊதியத்தினை அதிகரிக்க வேண்டும் என்று அனில் கும்ளே கோரிக்கை விடுத்துள்ளமையே இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபையின் அதிருப்திக்கு காரணம் என்றும் கூறப்பட்டது.

ஒரு அணித்தலைவரான விராட் கோஹ்லிக்கு கூடுதல் பொறுப்புக்கள் இருப்பதால் அவருக்கு ஊதியத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் தலைமைப் பயிற்சியாளர் என்ற முறையில் தேர்வுக் குழுவில் தன்னை உறுப்பினராக்க வேண்டும் போன்ற கும்ளேயின் கோரிக்கைகள் இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg