Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

கேப்பாப்பிலவு இராணுவ முகாமிற்கு அருகில் தீ!

In இலங்கை
Published: 07:49 GMT, May 30, 2017 |
0 Comments
1423
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam

முல்லைத்தீவு கேப்பாப்பிலவு இராணுவ முகாமிற்கு அருகில் காணப்படும் தோட்டமொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

கேப்பாப்பிலவு இராணுவ முகாமிற்கும் கேப்பாப்பிலவு மாதிரி கிராமத்திற்கும் இடையில் காணப்பட்ட தேக்கமரத் தோட்டத்தில் நேற்று (திங்கட்கிழமை) மாலை இத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இரவு 9 மணியளவில் குறித்த தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

தீயானது இராணுவ முகாம் அமைந்துள்ள பகுதியில் இருந்தே பரவியதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கேப்பாப்பிலவு மாதிரி கிராம மக்கள் கடந்த 91 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg