Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

படப்பிடிப்பு திகதி அறிவிக்கப்படாததால் விலகினேன்: ஸ்ருதி

In சினிமா
Updated: 09:31 GMT, May 30, 2017 | Published: 08:18 GMT, May 30, 2017 |
0 Comments
1403
This post was written by : Risha

படப்பிடிப்பு திகதிகள் சரியாக அறிவிக்கப்படாத நிலையில், ‘சங்கமித்ரா’ படத்திலிருந்து தானே விலகியதாக ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.

சுந்தர்.சி இயக்கத்தில் பிரம்மாண்டமாய் உருவாகவிருக்கும் ‘சங்கமித்ரா’ படத்திலிருந்து ஸ்ருதி ஹாசன் நீக்கப்பட்டுள்ளதாக அப்படத்தை தயாரிக்கும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்த நிலையிலேயே ஸ்ருதிஹாசன் இதனை குறிப்பிட்டுள்ளார்.

முழுமையான திரைக்கதை மற்றும் படப்பிடிப்பு திகதிகள் என்பன குறித்து சரியாக முடிவு செய்யப்படாததே இந்த முடிவுக்குக் காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது ‘பெஹன் ஹோகி தேரி’ எனும் பொலிவுட் படத்தின் விளம்பர வேலைகளில் ஈடுபட்டுவரும் ஸ்ருதிஹாசன், அதனை தொடர்ந்து சபாஷ் நாயுடு படத்துக்காக தயாராகி வருகிறார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg