Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜெயலலிதாவின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் பணிகள் ஆரம்பம்

In இந்தியா
Updated: 09:36 GMT, May 30, 2017 | Published: 08:59 GMT, May 30, 2017 |
0 Comments
1752
This post was written by : Risha

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரது 68 சொத்துக்களை பறிமுதல் செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஆனால், பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ள சொத்துக்களின் பட்டியலில் ஜெயலலிதாவின் போயர்ஸ்கார்டன், கொடநாடு மற்றும் சிறுதாவூர் பங்களா என்பன இடம்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட வேண்டிய நிலங்கள் அடையாளம் காணப்பட்டு பின்னர் அவற்றின் அருகில் ‘அரசுக்கு சொந்தமானது’ என்ற பதாதை வைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்ட பின்னர் அவற்றை அரசு தனது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளும் அல்லது அவற்றை விற்று அரசு கருவூலத்திற்கு பணமாக செலுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg