Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நடுக்கடலில் தத்தளித்த குடியேற்றவாசிகள் போர்த்துக்கல் விமானப்படையினரால் மீட்பு

In ஐரோப்பா
Updated: 11:32 GMT, May 30, 2017 | Published: 11:19 GMT, May 30, 2017 |
0 Comments
1603
This post was written by : Sylviya

நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மொரோக்கோ நாட்டைச் சேர்ந்த 34 குடியேற்றவாசிகள், போர்த்துக்கல் நாட்டின் விமானப்படையினரால் பாதுகாப்பாக காப்பாற்றப்பட்டுள்ளனர்.

குறித்த மீட்பு நடவடிக்கை நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) மாலையில் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெய்னின் கடற்கரைப் பகுதிக்கு அருகில் வந்துகொண்டிருந்த குடியேற்றவாசிகளின் படகு, திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்ததாகவும் உயிரை காப்பாற்றிக்கொள்ளும் பொருட்டு அதிலிருந்த குடியேற்றவாசிகள் கடலுக்குள் குதித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலில் பயணித்துக்கொண்டிருந்த போது எவ்வாறு தீ பரவியது எனவும் இந்த தீ பரவியதற்கான காரணம் என்னவெனவும்  இதுவரை தகவல் வெளியிடப்படவில்லை.

போர்த்துக்கல் விமானப்படையினர் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டிருந்த போதே குறித்த குடியேற்றவாசிகளை அவதானித்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg