Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரியங்கா சோப்ராவுக்கு தாதா சாகேப் பால்கே விருது

In சினிமா
Updated: 12:38 GMT, May 30, 2017 | Published: 11:44 GMT, May 30, 2017 |
0 Comments
1352
This post was written by : Risha

திரைத்துறையில் சேவையாற்றி வரும் கலைஞர்களுக்கு இந்திய மத்திய அரசு வழங்கும் தாதா சாகேப் பால்கே விருது பிரபல பொலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு வழங்கப்படவுள்ளது.

சர்வதேச அளவில் புகழ்பெற்ற நடிகை என்ற புதிய பிரிவு உள்வாங்கப்பட்டு, அந்த பிரிவின் கீழ் இந்த வருடம் பிரியங்கா சோப்ராவுக்கு இவ்விருது வழங்கப்படவுள்ளது.

பிரியங்கா சோப்ரா தனது கடின உழைப்பால் சர்வதேசத் தளத்தில் அறியப்பட்டுள்ளார். இந்தியா சார்பாக உலக அளவில் அவர் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். அவர் பணிகளால் ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படுகிறான். இதுவே இந்த விருதிற்கு புதிய பிரிவைச் சேர்க்கக் காரணமாக அமைந்துள்ளது என தாதா சாகேப் பால்கே அகாடமி விருதுக் குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

தாதா சாகேப் பால்கே விருது வழங்கும் விழா எதிர்வரும் ஜுன் மாதம் முதலாம் திகதி மும்பையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg