Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒரே பார்வையில் இன்றைய உலகச் செய்திகள்

In
Published: 15:34 GMT, May 30, 2017 |
0 Comments
1356
This post was written by : Sivaguru Siva
_96273103_gettyimages-630302502

ஜேர்மன் பேர்லின் நகரில் தற்கொலைத் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டதான சந்தேகத்தில் 17 வயதான அரசியல் தஞ்சக்கோரிக்கையாளர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பிறன்டன்பேர்க் மாவட்டத்தில் இவர் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கபட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டில் மேற்படி நபர் ஜேர்மனிக்குள் நுழைந்து அரசியல் தஞ்சம் கோரியதாகவும் தெரிவிக்கப்படுகிறது  முதலில் வெளிவந்த செய்திகளின்படி கைதுசெய்யப்பட்டவர் சிரியப்பூhவீகத்தை கொண்ட இளைஞர் எனவும்  தெரிவிக்கப்பட்டது.

கடந்த 2016 முதல் ஜேர்மனியிலும் பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது

_96267465_4c26c386-9b5f-4049-a918-012bc0debaa7

மஞ்செஸ்டரில் இடம்பெற்ற தற்கொலைத்தாக்குதலையடுத்து மூடப்பட்ட மஞ்செஸ்டர் விக்டோரியா தொடருந்து நிலையம் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

தற்கொலைக் குண்டுதாரியான சல்மான் அபெடியினால் மஞ்செஸ்டரில் கடந்த 22 ஆந் திகதி இரவு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 22 பேர் கொல்லப் பட்டிருந்தனர்.

இந்தநிலையில் சல்மான் அபெடி  நீலநிற பயணப்பெட்டியொன்றைக் காவிச்செல்லும் நிழற்படங்கள் வெளியாகியுள்ளன.

download

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறும் பிரெக்சிற் நடைமுறையின் முடிவில் ஸ்கொட்லாந்தின் சுதந்திரம் குறித்த குடியொப்ப வாக்கெடுப்பு  நடத்தப்பட வேண்டுமென எஸ்.என். பி எனப்படும் ஸ்கொட்லாந்து தேசியக்கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டள்ளது.

இன்று ஸ்கொட்லாந்து தேசியக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம்  அதன் தலைவர் நிக்கோலா ஸ்ருர்ஜனால் வெளியிடப்பட்டது.

_96264414_1bf02705-de02-4b0e-9612-b30ad42380f3

பங்களாதேசில் இன்று வீசிய மோரா சூறாவளிக்கு இதுவரை ஐந்துபேர் பலியாகியுள்ளனர். இந்த சூறாவளியினால் உடமைகளுக்கு பாரியசேதங்கள் ஏற்பட்டுள்ளன

மியன்மாரிலிருந்து தப்பிவந்து தஞ்சங்கோரிவாழும் றொகிஞ்சா முஸ்லிம்களின் அகதிமுகாம்களிலும் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

மோரா சூறாவளியின் பாதிப்பிலிருந்து தப்ப ஏராளமான மக்கள் கரையோர பிரதேசங்களிலிருந்து வெளியேறியுள்ளனர்.

d374992bd18445e8aac9754b2a73914d_18

மோல்டோவாவிலிருந்து ஐந்து ரஸ்ய ராஜதந்திரிகள் வெளியேற்றப்படும நகர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ரஸ்யா இந்த நகர்வுக்கு பதிலடி வழங்கப்படுமெனவும் குறிப்பிட்டுள்ளது

மோல்டோவா அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியம் சார்பான கொள்கைகளையுடைய அரசாங்கமாகக் கணிக்கப்படும் நிலையி;ல் மேற்படி ஐந்து ரஸ்ய ராஜதந்திரிகளை 72 மணிநேரத்தில் தனது நாட்டை விட்டு வெளியேறும்படி பணித்துள்ளது.

_96271209_18dubke-01-master768

அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் மைக் துப்கே தனது பதவியிலிருந்து இன்று விலகியுள்ளார்.

அரசதலைவர் டொனால்ட் ரம்;பினால் கடந்த மார்ச்சில் வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளராக இவர் நியமிக்கப்பட்டிருந்தார். எனினும் மூன்று மாதங்களில்; அவர் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.

இவரது இடத்துக்கு வெள்ளை மாளிகையின் ஊடகச்செயலாளர் சீன் ஸ்பைசர் நியமிக்கப்படலாமென எதிர்பார்க்கபடுகிற்து.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg