Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறிய ரபாடா

In கிாிக்கட்
Updated: 06:09 GMT, May 31, 2017 | Published: 04:50 GMT, May 31, 2017 |
0 Comments
1800
This post was written by : Anojkiyan

ஒருநாள் கிரிக்கெட் பந்துவீச்சாளர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலில், தென்னாபிரிக்காவின் காகிஸோ ரபாடா முதன்முறையாக முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

22 வயதான ரபாடா, இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், 39 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளை வீழ்த்தி அணியினை வெற்றிப் பாதைக்கு அழைத்துச்சென்றதன் மூலம் நான்கு இடங்கள் முன்னேறி 724 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு ஏற்றம் கண்டுள்ளார்.

ஏற்கனவே முதலிடத்தில் இருந்த தென்னாபிரிக்க அணியின் சுழல் பந்துவீச்சாளர் இம்ரான் தாஹீர், 722 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளார்.

காயம் காரணமான ஓய்வில் இருந்த அவுஸ்ரேலிய அணியின் புயல் வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டாக், 701 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

இதனைத் தொடர்ந்து, மேற்கிந்திய தீவுகளின் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன் 690 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், அவுஸ்ரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஸ் ஹசில்வுட் 684 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg