Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெள்ளவத்தை கட்டட சம்பவம்: அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை

In இலங்கை
Updated: 10:39 GMT, May 31, 2017 | Published: 10:00 GMT, May 31, 2017 |
0 Comments
1267
This post was written by : Ravivarman

வெள்ளவத்தை பிரதேசத்தில் இடிந்து விழுந்த கட்டடம் தொடர்பில், குறித்த கட்டடத்திற்கான கட்டுமானப்பணிகளுக்கு  அனுமதியினை அளித்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று இடர்முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார்.

அரசாங்க தகவல் கேட்போர் கூடத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சமீபத்தில் வெள்ளவத்தையில் இடிந்து விழுந்த மாடிக்கட்டட சம்பவத்தினைத்  தொடர்ந்து, சுமார் ஆயிரத்து 800 மாடிக்கட்டடங்கள் உரிய அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

வெள்ளவத்தையில் 3 மாடிக்கட்டடம் அமைப்பதாக கூறி அனுமதியை பெற்ற பின்னர் 7, 8 மாடிக்கட்டடங்களாக அமைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறானவற்றிற்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்பதால் இவற்றிற்கு அனுமதியளித்த அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg