Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கைதிகள் தப்பியோடுவதற்கு அதிகாரிகள் உடந்தை: சுவாமிநாதன் சந்தேகம்

In இலங்கை
Updated: 12:10 GMT, May 31, 2017 | Published: 12:02 GMT, May 31, 2017 |
0 Comments
1442
This post was written by : Varshini

நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து கைதிகள் தப்பியோடிய சம்பவத்துடன், சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் தொடர்பிருப்பதாக தான் சந்தேகிப்பதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு சென்று பார்வையிட்டதன் பின்னர் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சிறைச்சாலை சுவர்களில் துளையிட்டே கைதிகள் தப்பியோடியுள்ளனர் எனக் குறிப்பிட்ட அமைச்சர், சம்பவம் தொடர்பில் விரைவில் அறிக்கையை பெற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டிலுள்ள சகல சிறைச்சாலைகளிலும் உயர் பதவிகளில் மாற்றங்களை கொண்டுவரவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து நேற்று அதிகாலை நான்கு கைதிகள் தப்பியோடியமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg