Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

சுறா புட்டு

In
Published: 11:41 GMT, Jun 10, 2017 |
0 Comments
1118
This post was written by : Anojkiyan
Shark-Puttu

தேவையான பொருட்கள்

சுறா மீன் – 1/4 கிலோ
வெங்காயம் – 2
இஞ்சி, பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 3
கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை – சிறிதளவு
கடுகு – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிதளவு
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை

வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். சுறா மீனை சுத்தம் செய்து அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் வேக வைக்கவும். வெந்ததும் அதை ஆறவைத்து நன்றாக ஆறியதும் சுறா மீனின் தோலை நீக்கி நன்றாக உதிர்த்து கொள்ளவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி, கடுகு போட்டு பொரிந்ததும் பொடியாக பச்சை மிளகாய், வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.

பின்னர், இஞ்சி, பூண்டு விழுது, தேவையான அளவு உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும். அடுத்து அடுப்பின் தீயை குறைத்து அதில், உதிர்த்து வைத்துள்ள சுறா மீனைச் சேர்த்து நன்றாக கிளறவும். மீன் நன்றாக உதிரி உதிரியாக வரும் வரை கிளறி விடவும். கடைசியாக உதிரியாக வந்தவுடன் கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை தூவி இறக்கவும். சுறா புட்டு ரெடி!