Chrome Badge
android.png
athavannews.png
Athavan Newsswitch to mobile siteswitch to desktop site
தலைப்பு செய்திகள்

நுவரெலியாவில் நூருல் மொஹிதீன் ஜூம்மா பள்ளிவாசல் திறந்து வைப்பு

In இலங்கை
Published: 09:27 GMT, Jun 11, 2017 |
0 Comments
1184
This post was written by : Vithushagan

நுவரெலியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட பத்தனையில் நூருல் மொஹிதீன் ஜூம்மா பள்ளிவாசல் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

பள்ளிவாசலின் தலைவர் பசூர் மொஹாமட் தலைமையில் நேற்று (சனிக்கிழமை) மாலை நடைபெற்ற நிகழ்வில்,  பிரதம அதிதியாக நாவலப்பிட்டி ஹாஷ்மி அரபிக் கல்லூரியின் உப அதிபர் மௌலவி நசீர் (ஹாஷ்மி) கலந்து கொண்டார்.

மேலும், ஹட்டன் டிக்கோயா நகரசபையின் முன்னாள் தலைவர் எம்.ஏ.எஸ்.அபுசாலி, செயலாளர் ஹாரிஸ், பத்தனை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி, சர்வமத தலைவர்கள் மற்றும் வர்த்தக பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை, திறப்பு விழாவின் பின் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வும் நடை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

unnamed (5) unnamed (6) unnamed (7) unnamed (8)

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.