Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

முதலமைச்சருக்கு ஆதரவான உறுப்பினர்கள் ஆளுநருடன் சந்திப்பு!

In
Updated: 18:05 GMT, Jun 15, 2017 | Published: 17:30 GMT, Jun 15, 2017 |
0 Comments
3954
This post was written by : Ravivarman
aaa

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவான சில வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் ஆளுநர் றெஜினோட் குரேயைச் சந்தித்து,  15 உறுப்பினர்களின் நம்பிக்கைத் தீர்மானம் அடங்கிய மகஜர் ஒன்றினை அவரிடம் கையளித்துள்ளனர்.

வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம்,விந்தன் மற்றும் சர்வேஸ்வரன் ஆகியோர் அடங்கிய குழுவினரே வடக்கு மாகாண ஆளுநரை இன்று (வியாழக்கிழமை) மாலை சந்தித்துள்ளனர்.

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக தமிழரசுக்கட்சி மற்றும் சில வடக்கு மாகாணசபை உறுப்பினர்களால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக இவர்கள் ஆளுநருடன் கலந்துரையாடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் வடக்கு மாகாணசபையின் தற்போதைய சூழ்நிலையில் தான் தலையிடப்போவதில்லை எனவும், இவை குறித்த விடயங்களை முதலமைச்சரும் உறுப்பினர்களுமே தீர்மானிக்க வேண்டும் என எமது ஆதவன் செய்திச் சேவைக்குத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Untitled 15

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)