Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மஹிந்தவின் அடுத்த எதிர்ப்புக் கூட்டம் திருகோணமலையில்!

In இலங்கை
Updated: 09:35 GMT, Jun 18, 2017 | Published: 09:00 GMT, Jun 18, 2017 |
0 Comments
1253
icon_com
This post was written by : Ravivarman
mahinda-rajapaksa-reuters_650x400_81439909591

கூட்டு எதிர்க்கட்சியினால் அரசாங்கத்திற்கு எதிராக மாவட்ட ரீதியில் நடத்தப்பட்டு வரும் அடுத்த பொதுக் கூட்டம் திருகோணமலையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றவுள்ள இக்கூட்டம் எதிர்வரும் ஜூலை மாதம் 3ஆம் திகதி மாபெரும் எதிர்ப்புக் கூட்டமாக நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

மீண்டும் ஒருதடவை மக்களை ஒன்றுதிரட்டி கூட்டு எதிர்க்கட்சியினது பலத்தினை நிரூபிக்கப்போவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த மே தினத்தில் கூட்டு எதிர்க் கட்சியினால் காலிமுகத்திடலில் நடத்தப்பட்ட கூட்டத்தில் பெரும் எண்ணிக்கையானோர் கலந்து கொண்டதுடன் அரசியல் வட்டாரத்திலும் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg