இராமகிருஷ்ண மிஷன் தலைவர் காலமானார்: மோடி இரங்கல்
This post was written by : Varshini

இராமகிருஷ்ண மிஷனின் தலைவரான சுவாமி அத்மஸ்தானந்தா, தனது 98ஆவது வயதில் காலமானார்.
உடல் நலக் குறைவால் கொல்கத்தாவிலுள்ள இராமகிருஷ்ண மிஷன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலமானார்.
சுவாமி அத்மஸ்தானந்தாவின் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளதோடு, தாம் கொல்கத்தா செல்லும்போதெல்லாம் அவரிடம் ஆசி பெற்று வந்ததாக குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில் சுவாமி அத்மஸ்தானந்தாவின் மறைவானது, தம்மை தனிப்பட்ட முறையில் பெரிதும் பாதித்துள்ளதாகவும் பிரதம மோடி குறிப்பிட்டுள்ளார்.
அன்னாரின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், சமய பெரியார்கள் என பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.