Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

பயங்கரவாதிகளை குறிவைத்து ஈரான் தாக்குதல்!

In
Published: 05:29 GMT, Jun 19, 2017 |
0 Comments
1411
This post was written by : Sylviya

கிழக்கு சிரியாவில் உள்ள பயங்கரவாதிகளை அடியோடு அழிக்கும் வகையில், ஈரான் ஏவுகணைத் தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளது.

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் கடந்த வாரம் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, அதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே குறித்த ஏவுகணைத் தாக்குதல் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட்டுள்ளது.

குறித்த ஏவுகணை, மேற்கு ஈரானிலிருந்து கிழக்கு சிரியாவில் உள்ள டெய்ர் – அல் – ஸோர் (Deir al Zour) பகுதிக்கு ஏவப்பட்டதாகவும் அதில் பெருமளவான பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளதாகவும் அண்மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த தாக்குதலின் போது பயங்கரவாதிகளின் பெருமளவான ஆயுதங்கள் அழிக்கப்பட்டுள்ளதுடன், கிழக்கு சிரியாவில் உள்ள தலைமையகமும் முற்றாக சேதமுற்றுள்ளதாக ஈரானின் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)