Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

தமிழ் மக்கள் ஒன்றுபட்டால் கிழக்கை ஆளலாம்: துரைரட்ணம்

In
Published: 10:51 GMT, Jun 19, 2017 |
0 Comments
1495
This post was written by : Vithushagan

“கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் மக்கள் ஒன்றுபட்டு 95 சதவீதம் வாக்களித்தால், தமிழ் முதலமைச்சர் ஒருவரைப் பெற்றுக்கொள்ள முடியும்” என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான இரா.துரைரட்ணம் தெரிவித்துள்ளார்.

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தியாகிகள் தின நிகழ்வு, மட்டக்களப்பில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது, “தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இன்று வடக்கு, கிழக்கு இணைப்பு என்றால் என்னவென்று தெரியாது.

வடக்கு மாகாணத்தில் மாகாணசபை உறுப்பினர்கள் 38 பேரும் கிழக்கு மாகாணத்தில் மாகாணசபை உறுப்பினர்கள் 36 பேரும் இருக்கின்றனர். கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் தமிழர்கள் 40 சதவீதமும், முஸ்லிம்கள் 37 சதவீதமும், சிங்களவர்கள் 23 சதவீதமுமாக உள்ளார்கள்.

இந்நிலையில், கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் மக்கள் ஒன்றுபட்டு 95 சதவீதம் வாக்களித்தால், தமிழ் முதலமைச்சர் ஒருவரைப் பெற்றுக்கொள்ள முடியும்.

40 சதவீதமான தமிழர்கள் உள்ள கிழக்கு மாகாணத்தில், தேர்தலின்போது 50 சதவீதமானோரே வாக்களிக்கின்றார்கள். தமிழ் மக்கள் ஒன்றுபட்டு வாக்களிக்காமல் விட்டுவிட்டு, தமிழ் முதலமைச்சரைப் பற்றி நாம் கதைக்க முடியாது.

எனவே, எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேர்தல்களின்போது, கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் மக்கள் ஒன்றுபட்டு 95 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றேன்’ என்றார்.

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)