Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டியில் டு பிளிஸ்சிஸ் விளையாடுவது சந்தேகம்

In கிாிக்கட்
Updated: 06:02 GMT, Jul 1, 2017 | Published: 05:44 GMT, Jul 1, 2017 |
0 Comments
1265
icon_com
This post was written by : Anojkiyan
faf

தென்னாபிரிக்க டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் பாப் டு பிளிஸ்சிஸ், இங்கிலாந்து அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டு பிளிஸ்சிஸ்சின் மனைவி இமாரிக்கு கடந்த வாரம் குழந்தை பிறந்தனால் தாய் மற்றும் சேயின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் கண்ட பிறகே அவர் போட்டிக்கு திரும்புவார் என தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

ஆனால் அவர் மீண்டும் எப்போது அணிக்கு திரும்புவார் என தெரிவிக்கப்படவில்லை. ஆகையால் லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் எதிர்வரும் 6ஆம் திகதி நடைபெறவுள்ள முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டு பிளிஸ்சிஸ் இப்போட்டியில் விளையாடாத பட்சத்தில் அணியினை டீன் எல்கர் வழிநடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg