Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்: தென்கொரிய ஜனாதிபதி

In உலகம்
Published: 05:16 GMT, Jul 1, 2017 |
0 Comments
1420
icon_com
This post was written by : Sylviya

தென்கொரியா மற்றும் அமெரிக்காவுடன் வடகொரியா பேச்சுவார்த்தை நடத்த விரும்பினால் அதற்கான வாசல் திறந்தே உள்ளது என தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கத் தலைநகர் வொஷிங்டன் டி.சியில் உள்ள மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் உரையாற்றுகையில், “வடகொரியாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் வாய்ப்பு அதன் கைகளிலேயே உள்ளது. வடகொரியா பேச்சுவார்த்தை நடத்த விரும்பினால் அதற்கான வாசல் திறந்தே உள்ளது” என தெரிவித்தார்.

வடகொரியாவின் செயல்கள் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை உபயோகித்துள்ள போதும், அணுவாயுத உற்பத்தி தொடர்பில் முன்னேறிச் செல்லும் வடகொரியாவுக்கு எவ்வாறான பதிலடியை கொடுப்பார் என்பது தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் தெரிவிக்கப்படவில்லை.

அணுசக்தியினால் உருவாக்கப்பட்ட ஏவுகணை ஒன்றைத் தயாரித்து அதனை அமெரிக்கா நோக்கி ஏவ வடகொரியா திட்டமிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வடகொரியாவின் நெருங்கிய நட்பு நாடான சீனாவால் வடகொரியாவின் மிலேச்சத்தனமான நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியும் என ட்ரம்ப் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், சீனாவால் திருப்தியளிக்கத்தக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாததைத் தொடர்ந்து ட்ரம்ப் கடும் விரக்தியடைந்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg