Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மஹிந்த அமரவீரவின் கருத்துக்கு இராமேஸ்வர மீனவர்கள் கண்டனம்

In இலங்கை
Updated: 06:21 GMT, Jul 1, 2017 | Published: 06:12 GMT, Jul 1, 2017 |
0 Comments
1107
icon_com
This post was written by : Arul Jesu
indian fish

எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்டால் 20 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்படும் என கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்த கருத்துக்கு இராமேஸ்வரம் மீனவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த கருத்தை இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் அண்மையில் கூறியதாகவும், இந்த விடயத்தை கையாள தனி குழு அமைக்கப்பட்டு புதிய சட்ட விதிகள் வகுக்கப்படும் என்று அவர் தெரிவித்தாகவும் தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த கருத்துக்கே இராமேஸ்வர மீனவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளதாகவும், தமிழக மீனவர்களை ஒடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இலங்கை அரசாங்கம் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இந்த சட்டத்தை நிறைவேற்றினால் இந்திய – இலங்கை நாடுகளின் நல்லுறவில் பாதிப்பு ஏற்படும் என்றும் எனவே இந்த சட்டத்தை நிறைவேற்றக் கூடாது என இலங்கை அரசிடம் மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்றும் மீனவர்கள் கோரியுள்ளனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg