Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இடைக்கால அறிக்கை தமிழ் மக்களின் சந்தேகங்களை தீர்க்கும்: சுமந்திரன்

In இலங்கை
Published: 09:16 GMT, Jul 1, 2017 |
0 Comments
1531
icon_com
This post was written by : Risha

புதிய அரசியலமைப்பிற்கான இடைக்கால அறிக்கையானது தமிழ் மக்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு தீர்வாக அமையும் என எதிர்பார்ப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பு தொடர்பில் யாழில் இன்று (சனிக்கிழமை) ஊடகங்களுக்கு விளக்கமளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”புதிய அரசியலமைப்பிற்கான இடைக்கால அறிக்கை வெகுவிரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கின்றோம். அந்தவகையில் அரசாங்கம் இனியும் காலத்தை தாழ்த்தாது இடைக்கால அறிக்கையை வெளியிட வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

இது இடைக்கால அறிக்கையாக இருந்தாலும், அரசியலமைப்பு சட்டத்தில் இருக்க வேண்டிய அடிப்படை கோட்பாடுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள இணக்கப்பாடுகள் என்பன அதிலேயே வெளிப்படுத்தப்படவுள்ளன.

எனவே, இடைக்கால அறிக்கை தாமதமின்றி வெளிவருவது அத்தியவசியமானது என்பதுடன், அது தமிழ் மக்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு தீர்வாக அமையும்” என்றும் குறிப்பிட்டார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg