Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜனாதிபதியின் செயலாளராக ஒஸ்டின் பெர்னாண்டோ!

In இலங்கை
Updated: 04:59 GMT, Jul 2, 2017 | Published: 03:26 GMT, Jul 2, 2017 |
0 Comments
1278
icon_com
This post was written by : Vithushagan
Fernando-Sirisena

ஜனாதிபதியின் செயலாளராக, கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ விரைவில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கான கடிதத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஜனாதிபதி செயலராக இருந்த பி.பி.அபேகோன் நேற்று முன்தினம் தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகினார். இதனையடுத்து தாமே அந்த பதவிக்கு நியமிக்கப்படவுள்ளதாக ஒஸ்டின் பெர்ணான்டோ நேற்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நாளை மறுதினம் ஜனாதிபதி செயலாளராக பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த 1963ஆம் ஆண்டு பட்டதாரி ஆசிரியராக பதவியில் இணைந்த அவர் ஒஸ்டின் பெர்ணான்டோ, 2001ஆம் ஆண்டு போர் நிறுத்த உடன்படிக்கையின் போது விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தையிலும் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg