Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கண்களுக்கு விருந்தாய் அமைந்துள்ள ஜோயலின் ‘தேவதை’

In
Updated: 05:04 GMT, Jul 2, 2017 | Published: 04:17 GMT, Jul 2, 2017 |
0 Comments
1952
icon_com
This post was written by : Anojkiyan

திரைக்கு பின்னால் இதுவரை காலமும் சாதித்து வந்த இளம் இயக்குநர் ஜோயல், தற்போது ‘தேவதை’ என்ற அற்புத குறுந்திரைப்படத்தின் ஊடாக தன்னை கதாநாயகனாக உலகிற்கு காண்பித்துள்ளார்.

தானே இயக்கி நடித்திருக்கும் இப்படத்தில் ஜோயலின் துடிப்பான நடிப்பு, அழகு தேவதையின் மயக்கும் அழகு என்பன படத்தின் அடுத்த கட்டம் என்ன என்பதன் ஆவலை தூண்டுகின்றது.

யதார்த்தமான குறுந்திரைப்படங்களை கொடுத்து வந்த ஜோயலுக்கு இப்படம் மேலும் ஒருபடி கைகொடுத்துள்ளது என்றே கூறவேண்டும். சிறியவர் முதல் பெரியவர் வரை இலகுவாக புரிந்துகொள்ளும் வகையில் கோர்க்கப்பட்டுள்ள இப்படத்தின் உருக்கமான கதை, சில கணங்கள் பார்ப்போரின் கண்களில் இருந்து நீரை வரவைக்கின்றது.

பேபி ஏஞ்சல் மற்றும் ஜோயல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க மிலன், கெமிடஸ், ராதா, பேபி நிக்ஷா, பேபி துலாஞ்சனி, மேசி ஆகியோர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும் இக்குறுந்திரைப்படத்தை றொமிஸ் தயாரிக்க மனோஜிதன் படத்தை தொகுத்து வழங்கியுள்ளார். இசையின் மூலம் நெஹேமியா ரொஜர் படத்திற்கு உயிரூட்டியுள்ளார். பாடல் வரிகள் குணரதி. அழகுக்கே அழகு சேர்த்துள்ள ஒளிப்பதிவை ஜோன் யுவராஜ் மற்றும் மனோஜிதன் ஆகியோர் கச்சிதமாக தொகுத்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg