Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இங்கிலாந்தில் மேற்கொண்ட கடின பயிற்சியே மேற்கிந்திய தீவுகளில் வெளிப்படுகின்றது: ரஹானே

In கிாிக்கட்
Updated: 08:05 GMT, Jul 2, 2017 | Published: 07:05 GMT, Jul 2, 2017 |
0 Comments
1390
icon_com
This post was written by : Anojkiyan
CRICKET-TRI-WIS-IND

இங்கிலாந்தில் இருக்கும்போது உடற்தகுதியை சீராக வைத்திருக்க மேற்கொண்ட கடின பயிற்சியே தற்போது மேற்கிந்திய தீவுகளில் வெளிப்படுகின்றது என இந்தியக் கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அஜின்கியா ரஹானே தெரிவித்துள்ளார்.

நடைபெற்றுவரும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான தொடர் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

”இங்கிலாந்தில் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ண தொடரில் விளையாடாமல் இருக்கும்போது, நான் எனது உடற்தகுதி மற்றும் துடுப்பாட்டத்தில் அதிக கவனம் செலுத்திக் கொண்டிருந்தேன். இந்திய அணி மேற்கிந்திய தீவுகளுக்கு வரும்போது, அதிக ஓட்டங்கள் குவித்து சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற தீராத வேட்கை இருந்தது.

இங்கிலாந்தில் வலைப் பயிற்சியில் நன்றாக துடுப்பாட்டம் செய்தேன். அதேபோல் வெஸ்டமேற்கிந்திய தீவிலும் சிறப்பாக துடுப்பாட்டம் செய்தேன். ஆகவே, அதிக ஓட்டங்கள் அடிக்க வேண்டும், சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதை எதிர்பார்த்து கொண்டிருந்தேன். நான் அணித்தலைவர் விராட் கோஹ்லிக்கும், அணி நிர்வாகத்திற்கும் நன்றி சொல்லியாக வேண்டும். ஏனெனில், ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களம் இறங்க வாய்ப்பு கொடுத்தவர்கள் அவர்கள்தான். இங்கிலாந்தில் இருக்கும்போது உடற்தகுதியை சீராக வைத்திருக்க கடினமாக பயிற்சி எடுத்தேன். அந்த கடின பயிற்சிதான் தற்போது அறுவடையாகியுள்ளது” என கூறினார்.

ரஹானே மழையினால் கைவிடப்பட்ட முதல் போட்டியில் 62 ஓட்டங்களும், 2வது போட்டியில் 103 ஓட்டங்களும், மூன்றாவது போட்டியில் 72 ஓட்டங்களும் மொத்தமாக 237 ஓட்டங்களை குவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg