Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜேர்மனிய முன்னாள் அதிபரின் இறுதி ஊர்வலத்தில் உலக நாடுகளின் தலைவர்கள்

In ஐரோப்பா
Updated: 12:04 GMT, Jul 2, 2017 | Published: 12:02 GMT, Jul 2, 2017 |
0 Comments
1457
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
helmut

ஜேர்மனின் முன்னாள் அதிபர் ஹெல்முட் கோஹ்லியின் இறுதி ஊர்வலத்தில், ஜேர்மனின் முன்னாள் இந்நாள் தலைவர்கள் மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

உடல் நலக் குறைவால் கடந்த 16ஆம் திகதி காலமான ஜேர்மனின் முன்னாள் அதிபரின் இறுதிக்கிரியைகள் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றன.

ஜேர்மன் நாட்டு கொடியால் சுற்றப்பட்ட அவரது பூதவுடன் தாங்கிய பேழை, SPEYER CATHEDRAL தேவாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

இறுதி அஞ்சலி நிகழ்வில் ஜேர்மனின் தற்போதைய அதிபர் அங்கேலா மேர்கல், ஜேர்மன் ஜனாதிபதி பிரான்க் வோல்டர் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் அனைவரும் கலந்துகொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியக் கொடியால் சுற்றப்பட்டு, ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் வைக்கப்பட்டிருந்த ஹெல்முட்டின் உடலுக்கு, ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இவ் அஞ்சலி நிகழ்வில், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொனால்ட் டஸ்க், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டன் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோங் உள்ளிட்ட பலர் இரங்கல் உரையாற்றியதோடு, இறுதி அஞ்சலியும் செலுத்தினர்.

அதன் பின்னர் இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் கப்பலில் எடுத்துச்செல்லப்பட்ட அவரது பூதவுடன், ஸ்பியர் நகரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பிரிந்து கிடந்த மேற்கு மற்றும் கிழக்கு ஜேர்மனியை ஒன்றாக இணைத்து, தற்போதைய ஜேர்மனியை உருவாக்கிய பெருமை ஹெல்முட் கோஹ்லியையே சாரும். இவரது இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்றும் என்றும் வரலாற்றில் இவரது பெயர் என்றும் நிலைத்து நிற்கும் என்றும் ஐரோப்பிய தலைவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg