Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மயிலிட்டியில் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த காணிகள் விடுவிப்பு!

In இலங்கை
Updated: 12:50 GMT, Jul 2, 2017 | Published: 12:47 GMT, Jul 2, 2017 |
0 Comments
1659
This post was written by : Ravivarman

மயிலிட்டி மீன்பிடித் துறைமுகப் பகுதியில் 54 ஏக்கர் நிலப்பரப்பு  யாழ்.பாதுகாப்பு தலைமையகத்தினால் நாளை (திங்கட்கிழமை) விடுவிக்கப்படவுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அரசாங்க அதிபரிடம் குறித்த காணிகள் கையளிக்கப்பட்டு பொது மக்களுக்கு வழங்கிவைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தப் பிரதேசத்தில் சுமார் 50 குடும்பங்கள் மீளக் குடியமரவுள்ளதாகவும், அவர்களுக்கான அடிப்படைக்கட்டமைப்பு வசதிகள் விரைவில் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஊறணிப் பிரதேசத்திலும் படையினர் 35 ஏக்கர் காணியை கடந்த ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி விடுவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg