Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புதிய அரசியலமைப்பு சிறுபான்மையினருக்குத் தீர்வுகளை வழங்கும்: வின்ஸ்டன் பத்திராஜா

In இலங்கை
Published: 14:34 GMT, Jul 2, 2017 |
0 Comments
1257
icon_com
This post was written by : Ravivarman
dddddddddddddd

புதிய அரசியலமைப்பு சிறுபான்மை மக்களின் நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வினை காண்பதாக அமையும் என அரசியலமைப்பு மீளாய்வு மக்கள் பிரதிநிதிகள் பேரவையின் அதிகாரி எஸ்.வின்ஸ்டன் பத்திராஜா தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பினைத் தயாரித்தல் தொடர்பில் பொதுமக்களுக்கு தெளிவூட்டும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு மாவட்ட மக்களின் கருத்தறியும் நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) வின்சன்ட் தேசிய பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த காலத்தில் நாடாளுமன்றத்தினை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இரண்டு அரசியல் யாப்புகள் இந்த நாட்டுக்கு பயன்பட்டதாக நான் அறியவில்லை.

அந்த அரசியல் யாப்புகள் இனங்களிடையே ஒற்றுமையினை ஏற்படுத்தாத காரணத்தினால் அதனை தோல்வியான அரசியல் யாப்புகளாகவே நோக்க வேண்டியுள்ளது. மாகாண சபைகள் உருவாக்கப்பட்டு, ஆளுனர்கள் நியமிக்கப்பட்டதை தவிர வேறு எந்த வெற்றியையும் அரசியல் யாப்புகள் கொண்டிருக்கவில்லை என்பது உண்மையாகும்.

ஆனால் அதனைக் கொண்டு இனப் பிரச்சினைக்கான தீர்வினையும் காணவில்லை, நாட்டை முன்னேற்றவும் இல்லை. மாறாக 30 வருட கால உள்நாட்டு யுத்தம் ஒன்றுக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டோம்.

அதன்மூலம் பெற்றுக்கொண்ட பாடங்களைக் கொண்டு, தற்போதைய அரசாங்கம், மக்களின் விருப்பங்களைக் கொண்டதாக புதிய யாப்பினை உருவாக்கி, அதன் மூலமாக அனைத்து இன மக்களும் இந்த நாட்டின் பிரஜைகள் என்ற எண்ணத்துடன் ஒன்றுபட்டு பயணித்து, ஒரு இனத்தினை இன்னுமொரு இனம் அரவணைத்து வாழும் நிலையினை ஏற்படுத்தும் வகையில், இந்த புதிய யாப்பினை உருவாக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றது’ என எஸ்.வின்ஸ்டன் பத்திராஜா மேலும் தெரிவித்தார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg