Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

களியாட்ட நிகழ்வில் போதைப் பொருள் பாவனை: மாணவர்கள் கைது!

In இலங்கை
Published: 15:16 GMT, Jul 2, 2017 |
0 Comments
1469
icon_com
This post was written by : Ravivarman
alcohol3434-600-30-1498805026

சட்டவிரோத போதைப் பொருட்களை பயன்படுத்திய பாடசாலை மாணவர்கள் பலர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பதுளை போகஹமடின்ன பிரதேசத்திலுள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கஞ்ஜா, ஹெரோயின், போதை மாத்திரை போன்ற பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முகநூல் வலையமைப்பைப் பயன்படுத்தி இந்த களியாட்ட நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இந்த களியாட்ட நிகழ்வுக்கு பிரவேசிக்க ஒருவரிடம் ஆயிரம் ரூபா முதல் 2500 ரூபா வரையில் கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற இந்நிகழ்வின் போது பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இளைஞர்,யுவதிகள் சுமார் 200 பேர் அங்கு காணப்பட்டதாகவும், இவர்களிடையே போதைப் பொருட்கள் கைவசம் வைத்திருந்த 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg