Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தனி மாநிலம் கோரி மோர்ச்சா கட்சியினர் தீப்பந்தம் ஏந்தி பேரணி

In இந்தியா
Published: 04:55 GMT, Jul 3, 2017 |
0 Comments
1327
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam

கோர்காலந்தை தனி மாநிலமாக்குமாறு கோரி, கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா கட்சியினர் தீப்பந்தங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்ட பேரணியொன்றை முன்னெடுத்துள்ளனர்.

இந்தியாவின் கிழக்கு மாநிலமான மேற்கு வங்கத்தில் நேற்று இந்த ஆர்ப்பாட்ட பேரணியை முன்னெடுத்த மோர்ச்சா அமைப்பினர், சிலிகுரி நகரத்தை தீப்பந்தங்களுடன் சுற்றிவந்ததோடு, பதாதைகளையும் தாங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தம்மை சூழ்ந்துள்ள இருளை அகற்றி ஒளியை பெற்றுக்கொள்ளும் அடையாளமாகவே தாம் தீப்பந்தங்களை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக தெரிவிக்கும் மோர்ச்சா கட்சியினர், தமக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம் என தெரிவித்தனர்.

மேற்கு வங்கத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பாடசாலைகளிலும் வங்காள மொழி கட்டாயமாக்கப்படும் என்று மேற்கு வங்க கல்வி அமைச்சர் பார்தா சட்டர்ஜி அறிவித்ததை தொடர்ந்தே கோர்காலாந்தை தனி மாநிலமாக்க வேண்டுமென மோர்ச்சா கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

டார்ஜிலிங் மலைப்பகுதியில் கடந்த 3 வாரங்களாக முன்னெடுத்து வரும் தொடர் ஆர்ப்பாட்டங்களின் போது, ஆர்ப்பாட்டக்காரர்களும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இதில், மோர்ச்சா கட்சியை சேர்ந்த மூவர் கொல்லப்பட்டதோடு, ஐவர் படுகாயமடைந்தனர்.

இதேவேளை, மோர்ச்சா கட்சியினரின் ஆர்ப்பாட்டம் சட்டவிரோதமானதென நீதிமன்றமும் அறிவித்துள்ள நிலையில், வன்முறையில் ஈடுபடும் மோர்ச்சா கட்சியினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg