Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விம்பிள்டன் பட்டம் வெல்வேன்: நடால் நம்பிக்கை

In விளையாட்டு
Published: 05:48 GMT, Jul 3, 2017 |
0 Comments
1217
icon_com
This post was written by : Vithushagan
201707021556232526_nadal001-s._L_styvpf

ஆரம்ப சுற்றுகளில் வெற்றி பெற்றுவிட்டேன் என்றால், விம்பிள்டன் பட்டம் எனக்குத்தான் என்று ரபேல் நடால்  நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்திற்கான விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் தொடர் இன்று ஆரம்பமாகி 16ஆம் திகதி வரை நடை பெறுகின்றது இது தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே  இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஸ்பெயின் நாட்டின் முன்னணி டென்னிஸ் வீரர் ரபேல் நடால். 31 வயதாகும் இவர் இந்த வருடத்திற்கான பிரெஞ்ச் ஓபனை வென்றதன் மூலம் 10 முறை பிரெஞ்சு ஓபனை வென்று சாதனைப் படைத்துள்ளார்.

ஒரு வீரர் 10 முறை ஒரே கிராண்ட்ஸ்லாத்தை வென்றவர் என்ற பெருமை படைத்த நடால், செம்மண் தரையில் அபாரமாக விளையாடக்கூடியவர்.

ஆனால், புற்தரையில் (அவுஸ்ரேலியா, விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஓபன்) 5 முறை மட்டுமே சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

இந்த தொடர் நடாலுக்கு ராசியாக அமைந்ததில்லை. கடந்த 2011ஆம் ஆண்டில் இருந்து நான்காவது சுற்றுக்கு மேல் முன்னேறியது கிடையாது. இதில் நான்கு முறை தரவரிசையில் பின்னால் உள்ள வீரர்களிடம் தோல்வியடைந்து வெளியேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg