Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உடைந்த பாலமும் – ஊசலாடும் மக்கள் பயணமும்!

In இலங்கை
Updated: 15:17 GMT, Jul 3, 2017 | Published: 15:17 GMT, Jul 3, 2017 |
0 Comments
1224
This post was written by : Ravivarman

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உட்லெக் தோட்டத்திற்குச் செல்லும் பாலம் சேதமடைந்து காணப்படுவதால் அப்பகுதி மக்களின் போக்குவரத்துப் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இம்மக்களின் நலன் கருதி 30 வருடங்களுக்கு முன்பு அமைத்து கொடுக்கப்பட்ட இரும்பு பாலம் மிகவும் சிறிய அளவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், மழைக்காலங்களில் இப்பாலமும் வெள்ளத்தால் மூழ்கிவிடும் அபாயத்திலிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பிரதேசத்தில் 230 இற்கு மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 800க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருவதுடன், பாலம் உடைந்து காணப்படுவதால் சுமார் 06 கிலோ மீற்றர் தூரம் கொண்ட பாதையின் ஊடாக பயணிக்க வேண்டியுள்ளதாக பொது மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தற்போது இப்பாலம் உடைந்த நிலையில் காணப்படுவதால் பாலம் எந்த நேரத்திலும் உடைந்து போகக்கூடும் என்ற அச்சத்தில் பயணத்தினை தொடர்வதாக அங்குள்ள மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

01

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg