Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மஹிந்தவின் நிகழ்ச்சி நிரலில் அரச மருத்துவ அதிகாரிகள்: அசாத் சாலி

In இலங்கை
Published: 10:41 GMT, Jul 4, 2017 |
0 Comments
1734
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam

கடந்த ஆட்சிக்காலத்தில் சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியை உருவாக்கி, முன்னாள் ஜனாதிபதியால் 11 பேருக்கு புலமைப்பரிசில்களும் வழங்கப்பட்ட போது தூங்கிக்கொண்டிருந்த அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர், தற்போது திடீரென விழித்தெழுந்து சைட்டத்திற்கு எதிராக செயற்படுவது ஏன் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மஹிந்தவை சென்று சந்தித்த அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் பாதினிய, தமது ஆதரவையும் தெரிவித்ததை சுட்டிக்காட்டிய அசாத் சாலி, சைட்டத்தின் மூலம் ஆட்சியை கவிழ்த்து மஹிந்தவிடம் மீண்டும் ஒப்படைக்கவே அரச மருத்துவ அதிகாரிகள் முனைகின்றனர் எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் பணத்திலும் மக்களது வரிப்பணத்திலும் படித்து வைத்தியர்களாக வந்தவர்கள், தமது தனியார் வைத்திய நிலையங்களை கொண்டுசெல்லவும், வெளிநாடுகளுக்கு மருத்துவ மாணவர்களை ஒப்பந்தம் அடிப்படையில் அனுப்பி வைப்பதற்குமே சைட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறான ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக மக்கள் தற்போது ஒன்றுதிரண்டுள்ள நிலையில், அரச மருத்துவர்கள் அனைவரும் மருத்துவ அதிகாரிகள் சங்கத்தில் இருப்பதாக இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டுனெவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, உமா ஓயா திட்டம் தொடர்பில் கடந்த அரசாங்கத்தில் எவ்வித எதிர்ப்பையும் தெரிவிக்காதவர்களே தற்போது மக்களை ஒன்றுதிரட்டி செயற்படுவதாக குறிப்பிட்ட அசாத் சாலி, நேற்றைய தினம் உமா ஓயா திட்டத்தை பார்வையிட சென்ற அமைச்சர் மஹிந்த அமரவீரவை சிறைப்பிடித்து வைத்தமையானது நாட்டின் ஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்ட பாரிய அச்சுறுத்தல் எனவும், இதற்கு காரணமானவரை உடன் கைதுசெய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg