Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மும்பை தொடர் குண்டுவெடிப்பில் பெற்றோரை இழந்த சிறுவனை சந்தித்தார் மோடி

In இந்தியா
Published: 06:00 GMT, Jul 6, 2017 |
0 Comments
1235
icon_com
This post was written by : Elakkiya

மும்பையில் கடந்த 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற தொடர்குண்டு வெடிப்பு சம்பவத்தில் பெற்றோரை இழந்து பாதிக்கப்பட்ட மொஷே ஹொல்ஸ்பேர்க் என்ற சிறுவனை இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

ஜெருசலேமில் தனது தாத்தா, பாட்டியுடன் வசித்துவரும் 11 வயது சிறுவனான மொஷே ஹொல்ஸ்பேர்க்கை நேற்று (புதன்கிழமை) பிரதமர் மோடி சந்தித்துள்ளார். பிரதமரை வரவேற்ற சிறுவனின் தாத்தா, இந்தியாவின் பாதுகாப்பை மேலும் மேம்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை மோஷே மற்றும் அவரது குடும்பத்தினரை இந்தியா வருகைதருமாறு அழைப்பு விடுத்த மோடி, அவர்களுக்கு நீண்டகால விசா வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார்.

2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28 ஆம் திகதி இடம்பெற்ற இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் போது மொஷே ஹொல்ஸ்பேர்க்கின் தந்தை கவ்ரியல் மற்றும் தாய் ரிவ்கா ஆகியோர் உயிரிழந்தனர். தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற போது இரண்டு வயதே நிரம்பிய சிறுவனான மொஷே ஹொல்ஸ்பேர்க் அவருடைய பராமரிப்பாளரான சாண்ட்ரா சாமுவேல் என்பவரால் காப்பற்றாப்பட்டார்.

இந்தியாவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்த தொடர் குண்டுவெப்பு சம்பவத்தில் 166 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg