Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரதமர் மோடியின் அனுபவ குறிப்புடன் விக்கியை சந்தித்தார் தமிழிசை (2ஆம் இணைப்பு)

In இலங்கை
Updated: 15:28 GMT, Jul 6, 2017 | Published: 12:14 GMT, Jul 6, 2017 |
0 Comments
2129
icon_com
This post was written by : Vithushagan
19747639_1527792110574837_367050961_o

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் முதல்வர் விக்னேஸ்வரனை சந்தித்ததுடன் பிரதமர் மோடியின் அனுபவ குறிப்பு ஒன்றினையும் வழங்கியுள்ளார்.

யாழ்பாணத்திற்கான விஜயத்தினை இன்று (வியாழக்கிழமை) மேற்கொண்டிருந்த தமிழிசை, வடக்கு முதலமைச்சரின் இல்லத்தில் அவரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதனையடுத்து, ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த தமிழிசை இச்சந்திப்பு சம்பிரதாயபூர்வமாக இடம்பெற்றதாகவும் பிரதமர் மோடி குஜராத் முதலமைச்சராக இருந்த காலத்தில் அந்த மாநிலத்தை முன்னேற்றுவதற்கு மேற்கொண்ட முயற்சிகளை விபரிக்கும் வகையில் தான் எழுதிய நூலினை முதல்வரிடம் கையளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்திய மீனவர்கள் விவகாரம் தொடர்பில் நேற்று வெளிவிவகார அமைச்சரை சந்தித்து கலந்துரையாடியதாகவும் அவர் வழங்கிய உறுதி மொழிகள் நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு முதல்வரை சந்தித்தார் தமிழிசை சவுந்தரராஜன்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பா.ஜ.க. தமிழகத்தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வடக்கு மாகாண முதலமைச்சர்  சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்துள்ளார்.

குறித்த சந்திப்பு முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் தற்பொழுது நடை பெற்று வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் ஆகியோரை தமிழிசை நேற்று சந்தித்திருந்தார்.

தனிப்பட்ட விஜயமாக இலங்கை வந்துள்ள இவர், நாளை இறுதி யுத்தம் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு அங்குள்ள நிலைமைகள் குறித்து ஆராயவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg