Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒழுக்கக் கோவை: கரு ஜயசூரிய

In இலங்கை
Updated: 15:13 GMT, Jul 6, 2017 | Published: 15:13 GMT, Jul 6, 2017 |
0 Comments
1389
This post was written by : Surenth

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்கக் கோவை தயாரிக்கப்படவுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். சர்வமதத் தலைவர்களுடன் இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த திட்டத்திற்கு நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளும், கட்சி உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும், எனவும் கரு ஜயசூரிய இதன் போது நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, கடந்த காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஒழுக்க விதிமுறைகளை மீறி நாடாளுமன்றத்தில் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg