Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாலைவனத்தில் பூமரங்களை நாட்டும் இஸ்ரேல்- ஆயுதத்தில் மட்டுமின்றி நீர்பாசனத்திலும் இஸ்ரேல் முதலிடம்

In தொழில்நுட்பம்
Published: 07:22 GMT, Jul 7, 2017 |
0 Comments
1109
icon_com
This post was written by : Kemasiya
_96831250_ce5e8b1f-d280-46ea-a748-6e61132abb2a

ஆயுத தொழில் நுட்பத்தில் வல்லமை மிக்க இஸ்ரேல் நீர்ப்பாசன தொழில் நுட்பத்திலம் உலகை வென்றது. பாலைவனத்தில் பூமரங்களை நாட்டி பசுமை நாடாக மிளிர்கின்றது இஸ்ரேல்.

பாலைவனத்தில் பசுமையை கொண்டுவரமுடியும் என்ற அற்புதத்தை உலகிற்கு நிகழ்த்திக் காட்டிய நாடு இஸ்ரேல் என்றே சொல்ல வேண்டும்.

இந்தியப் பிரதமர் இஸ்ரேலுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருக்கும் நிலையில் நீர்ப்பாசனத்துறையில் இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தங்கள் உருவாகும் என்று பரவலாக நம்பப்படுகிறது.

தண்ணீரின் ஒரு துளியைக் கூட வீணடிக்காமல் இருக்கும் பண்பை இஸ்ரேலிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம்.

கடல்நீரை சுத்திகரித்து குடிநீராக மாற்றும் இஸ்ரேல் கழிவுநீரை மறுசுழற்சி செய்து மறுபயன்பாட்டுக்கு கொண்டு வருகிறது.

இஸ்ரேலில் பாசனத்திற்காக பயன்படுத்தப்படும் தண்ணீரில் பாதியளவு மறுசுழற்சி செய்யப்பட்ட கழிவுநீர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலைவனத்தில் பூமரங்களை நாட்டி பசுமை காண்கின்றனர் இஸ்ரேலியர்கள். பாலைவனப் பகுதிகளில் வளரும் பயிர்களிலும் இஸ்ரேலியர்கள் அதிக கவனம் செலுத்துகிறார்கள். பாலைவனத்தில் பணத்திற்காகவும் புரேட்டின் சத்துக்காகவும் மீன்வளர்ப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இதற்கு உவர்நீரே பிரதானம் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலில் உவர் நீருக்கு உகந்த விவசாயம் மேற்கொள்வதால் அங்கு விவசாயம் உவப்பை ஏற்படுத்துவதாக இருக்கிறது. பாலைவனத்திலும் பசுமை பூத்துக்குலுங்குவது இஸ்ரேலில் தான் என்பது குறிப்பிடத்தக்கது,

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg