Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அவசரகால சட்டத்தினை நீடிப்பதற்கு பிரான்ஸ் நாடாளுமன்றம் அனுமதி

In ஐரோப்பா
Updated: 07:43 GMT, Jul 7, 2017 | Published: 07:42 GMT, Jul 7, 2017 |
0 Comments
1198
icon_com
This post was written by : Elakkiya
77f83daa-0bce-44b2-bef2-e6e0fd4b43dd

பிரான்ஸில் அவசரகாலச் சட்டத்தினை நீடிப்பது குறித்து அந்நாட்டு நாடாளுமன்றில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதம் வரையில் அவசரகால சட்டத்தினை நீடிப்பது தொடர்பில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற இந்த வாக்கெடுப்பில் 137 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 13 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்துள்ளனர்.

பிரான்ஸில் தொடர்ச்சியாக பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில், இந்த சட்டம் மிகவும் அவசியமானது என பிரான்ஸ் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு சர்வதேச நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பரிஸ் பயங்கரவாத தாக்குதலில் 130 பேர் உயிரிழந்த நிலையில் அந்நாட்டு ஜனாதிபதி பிரான்சுவா ஹொலாண்டினால் முதன்முறையாக அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அவசரகால நிலை தொடர்ச்சியாக நீடிக்கப்பட்டு 6 ஆவது முறையாக தற்போது நீடிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்சுவா ஹொலாண்டினால் பிரகடனப்படுத்தப்பட்ட இந்த அவசரகால நிலைச் சட்டமானது அரச படையினருக்கு அதிகளவிலான சுதந்திரத்தை அளித்துள்ளது. குறிப்பாக எந்நேரத்திலும் எவ்விடத்திலும் மக்கள் மற்றும் வாகனங்களை சோதனைக்கு உட்படுத்த அனுமதி வழங்கியுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg