Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரசியலமைப்பினால் நல்லிணக்கம் சாத்தியப்படாது: பொதுபலசேனா

In இலங்கை
Updated: 03:58 GMT, Jul 8, 2017 | Published: 02:45 GMT, Jul 8, 2017 |
0 Comments
1245
icon_com
This post was written by : Anojkiyan
pod

நாட்டு மக்களிடையே விரிசலையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்துகின்ற ஒரு அரசியலமைப்பினால் நல்லிணக்கம் ஒருபோதும் சாத்தியப்படாது என பொதுபல சேனா அமைப்பு கூறியுள்ளது.

அவ்வமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்விடயத்தை குறிப்பிட்டுள்ளது. மேலும் குறித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,

“நாட்டில் சிங்கள பௌத்தர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் பற்றி ஆராய்வதற்கான உண்மையை கண்டறியும் ஆணைக்குழு நிறுவப்பட வேண்டும். அதேநேரம் 2002ஆம் ஆண்டில் புத்தசாசன விவகாரத்திற்காக நிறுவப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாட்டின் பெரும்பான்மையினரிடத்தில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்படாத போது அது சகல மக்கள் குழுக்களுக்கு பாதிப்பாக அமைந்துவிடும். அதேபோல் ஞானசார தேரர் எதிர்கொள்ளும் நெருக்கடிகளையும் நீங்கள் விளங்கிக்கொள்ள இது ஒரு சந்தர்ப்பமாக அமையும்” என குறிப்பிட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg