Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டி.டி. வி.தினகரன் தனிப்பெரும் தலைவராவார்: நாஞ்சில் சம்பத்

In இந்தியா
Updated: 06:01 GMT, Jul 8, 2017 | Published: 06:01 GMT, Jul 8, 2017 |
0 Comments
1239
This post was written by : Surenth

டி.டி. வி.தினகரன் தனிப்பெரும் தலைவராக விரைவில் உருவெடுப்பார் என்றும் அவருடன் தானும் சேர்ந்து பணியாற்றும் காலம் விரைவில் மலரும் என்றும் தமிழக சட்டமன்ற உறுப்பினர் நாஞ்சில் சம்பத் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நேற்று (வெள்ளிக்கிழ்மை) டி.டி.வி.தினகரனை சென்னையில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து பேசிய பின்னர், சந்திப்பு குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி. வி.தினகரனை கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகிறார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கட்சிக்குள் தற்போது காணப்படும் சூழ்நிலை நிரந்தரமானதல்ல என்றும் விரைவில் அது மாறும் என்ற நம்பிக்கை தன்னுள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போது நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிவதற்குள் அ.தி.மு.க.வின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவிப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg